Tamil Eelam Navy

  • Tamil Eelam Navy

    Posted by Tamil Mahan on July 29, 2022 at 6:08 pm

    ஈழத்தமிழரால் கடலில் ஓட்டப்பட்ட ‘மிராஜ் (Wave Rider) மற்றும் தல்ராஜ்’ வகைப் படகுகள் பற்றி நீங்கள் அறிந்தது என்ன?

    By நன்னிச் சோழன் (Nanni Chozhan)

    ‘2005 ஆண்டு முல்லைத் தீவுக் கடலில் ஓடும் கடற்புலிகளின் படகுகள். இப்படத்தில் 2 வகுப்பைச் சேர்ந்த 3 விதமான மொத்தம் 4 படகுகள் தெரிகின்றன. | படிமப்புரவு: Stock Photos, Stock Images & Vectors

    <hr width=”148px”>

    இவை 1993 இல் இருந்து 2009 ஐந்தாம் மாதம் வரை கடலில் ஓடின. பின்னாளில் சிங்களக் கடற்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டு ‘Wave Rider’ என்னும் அதே பெயரிலே மீண்டும் கடலில் ஓடுகின்றன. இவைதான் கடற்புலிகளின் முதன்மை கடற்சண்டைக் கலங்கள் ஆகும். இவை உலகத்தால் வேகச் சுடுகலப் படகு (FGB) என்னும் வகையினில் சேர்க்கப்பட்டன. தமிழீழத்தில் இவை வேகச் சண்டைப் படகு (Fast fighting boat) என்னும் வகையினில் சேர்க்கப்பட்டிருந்தன. கடற்புலிகளிடம் இவை 20–30 வரை இருந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    புலிகளால் பயன்படுத்தப்பட்ட இக்கடற்கலங்கள் எல்லாம் ஆடியிழைகளால் (fiber glass) ஆனவை.. ஆகையாலத்தான் இவை யூதரின் டோறாக்களைப் (Super Dvora Mk-III. 2008 ஆம் ஆண்டின் இறுதியில் இதன் பெரும வேகம் 48.3 நோட்ஸ் ஆகும்) போல அதிவேகமாக கடலில் ஓடின… ஏன் டோராக்களையே கடலில் துரத்தும் அளவிற்கு வேகம் பெற்றிருந்தன. கடற்புலிகளால் நான்காம் ஈழப்போரில் கட்டப்பட்ட ஒரு வகை வேகச் சண்டைப் படகுகளானவை 50 நோட்ஸ் வேகத்தில் ஓடியவை ஆகும். அதன் படம் எனக்கு கிடைக்கப் பெறவில்லை. அந்த சண்டைக் கலத்தின் வெள்ளோட்டத்தின் போது தான் கடற்புலிகளின் சேர்ப்பனான(Adm.) சிறப்புக் கட்டளையாளர் சூசை அவர்கள் நேர்ச்சியாகக் காயப்பட்டவர் என்பது இங்கு நினைவு கூரத்தக்கது.

    இக்கடற்கலங்களை கட்டுவதற்கு புலிகளிடம் 2 பிரிவுகள் இருந்தன. அவையாவன, மங்கை & டேவிட் படகு கட்டுமானம் என்பவையே.. கடற்புலிகள் தங்களின் இந்தக் கலங்களை வண்டி என்று அடைமொழியிட்டு அழைப்பார்கள். அதில், சமருக்குச் செல்லும் கலங்களிற்கு சண்டை வண்டி என்று அடைமொழியிட்டிருந்தனர். இவர்கள் தங்கள் கடற்கலங்களில் KOEN, FURNOCO, JRC, JMA, TOKIMEC, Garmin & Ray Marine ஆகிய கதுவீகளை (RADAR) பயன்படுத்தியிருந்தார்கள். (இவற்றில் எந்தக் கலத்தில் எதனைப் பயன்படுத்தினார்கள் என்பது தெரியாததால் அவற்றின் வடிவங்களை மட்டும் கீழே கொடுத்திருக்கிறேன்..)

    இக்கலங்கள் யாவும் தரித்து நிற்க துறைமுகங்கள் இல்லையாதலால் இவை படகுகாவிகளில்(dock) ஏற்றி அவர்கட்கு தேவையான இடங்களில் உருமறைக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். பின் கடற்சமர் வரும்போது உழுபொறியின்(tractor) உதவியுடன் கரைக்கு இழுத்துவரப்பட்டு அங்கு நிற்கு ஒருவகை இடிவாருவகத்தின்(Bulldozer) உதவியுடன் கடலினுள்ளே இறக்கப்படும். இறக்கும் போது கரையோர மணல் சாய்வாக தோண்டப்பட்டே இறக்கப்படும். இறக்கிய பின்னர் படகுகாவிகள் எல்லாம் அருகில் உருமறைக்கக் கூடிய இடங்களில் தரிபெறும். பின்னர், கடற்சமர் முடித்து கரைக்கு திரும்பிவரும் படகுகள் யாவும் இதில் ஏற்றப்பட்டு மீண்டும் பாதுகாப்பான இடங்களிற்கு கொண்டு செல்லப்படும்.

    ‘பலவகை படகுகாவிகள்’

    ‘மணலைத் தோண்ட வரும் அந்த இடிவாருவகம்(bulldozer)’

    ‘மணலைத் தோண்டும் இடிவாருவகம்’

    ‘தோண்டப்பட்ட சாய்வான இடத்தினூடாக கடலினுள் இறக்கபடும் முராஜ் வகைப் படகு | படகு, படகுகாவியின் மேலே வைக்கப்பட்டிருப்பதை கவனிக்கவும்’

    கடற்புலிகளின் கடற்கலங்கள் பல்வேறு வகையாக இருந்தாலும் அவர்கள் தங்களின் ஒவ்வொரு கடற்கலங்களுக்கும் தனித்தனிப் பெயர்களை(கலப்பெயர்) சூட்டியிருந்தனர். அவை அவர்களின் அமைப்பில் இருந்து வீரச்சாவினை தழுவிய போராளிகளின் பெயர்களை தாங்கி இருந்தன. இப்பெயர்கள் யாவும் அக்கலங்களின் கலக்கூட்டின் நடு அல்லது முன்பகுதியில் எழுதப்பட்டிருந்தன. சில கலங்களின் கலக்கூட்டில் அவற்றின் கலப் பெயர்கள் எதுவும் பொறிக்கப்படவில்லை. அவ்வாறு இருந்த பெயர்களை என்னால் இயன்றளவு தேடிச் சேகரித்துள்ளேன்.. அவையாவன,

    • மிராஜ் வகைக் கலன்: இங்கு 32 கலங்களின் பெயர்களை கொடுத்துள்ளேன்.
    • பிரசாந்த் வகுப்பு:-
    • கலையரசி, பரந்தாமன், மாதவி, இசையரசி, தேன்மொழி, உதயச்செல்வி, மதன், மருதன், அதியமான்(ஒஸ்கார்), சேரன், கொலின்ஸ், செழியன், பாரதிதாசன், அகச்செழியன், ரோஜா, இளநீலா, கடலரசன், தீபன், சுகி, ராஜ்மோகன், அருணா, கேசவன், இளந்தாரகை
    • புலிகளின் கட்டளைக் கலத்தின் பெயராக சிங்களவர் வெளியிட்டது – இளந்தாரகை
  • மதன் வகுப்பு:
    • பசீலன், எரிமலை, {_ _ _ கை(முதல் 3 எழுத்துக்களும் தெரியவில்லை)}, {ரா(சி/கி)_(எழுத்து தெரியவில்லை)னகன்}, வேங்கை, போர்க், பிரசாந்த், இன்னும் ஒன்றினது பெயர் சிதைந்திருப்பதால் அறியமுடியவில்லை.
    • புலிகளின் ஆழ்கடல் சண்டைக் கலங்களின் கட்டளைப் படகின் பெயராக சிங்களவர் வெளியிட்டது – பிரசாந்த்
  • இந்துமதி – இந்தக் கலம் போன்ற வகுப்பினை உடைய கலங்கள் எந்த வகை, எந்த வகுப்பு என்று அறியமுடியவில்லை.
  • தல்ராஜ் வகைக் கலன்: எப்படிப்பட்டது என்றே தெரியவில்லை!
  • ‘வர்மன்’ என்னும் கலப்பெயரிக் கொண்ட இக்கலத்தின் வகுப்பு, வகை பற்றி எந்தவொரு தகவலும் இல்லை.

    <hr width=”148px”>

    சரி, இனி ஒவ்வொரு வகையினைப் பற்றியும் காண்போம்.

    — மிராஜ் வகைப் படகு (Miraj Type boat)

    முதலில் மிராஜ் வகைப் படகுகள் பற்றி காண்போம். இவை Wave Rider என்றும் புலிகளால் அழைக்கப்பட்டன. இப்பெயரானது இக்கலங்களின் மீகாமன் அறையின் பக்கவாட்டில் பொறிக்கப்பட்டிருக்கும். இவற்றில் கடற்புலிகளிடம் 2 வகுப்புப் படகுகள் இருந்ததன. அவை ஆவன;

    1. பிரசாந்த் வகுப்பு – கூர் அணியப் படகு (Pointed bow boats)
    2. மதன் வகுப்பு – கரண்டி அணியப் படகு (spoon bow boats)

    இவ்வகைக் கலங்கள் பெரியளவிலான தாக்குதல் கலங்கள் ஆகும். இவை யூதர் படகேறி சீறும் கணையோடு கடலில் விரையும் சிறீலங்காக் கடற்படையோடு பொருத கடற்புலிகளுக்கு பெரிதும் உற்ற துணையாய் இருந்தன. இவை 1993இற்றான் முதன் முதலாக புலிகளால் கட்டுவிக்கப்பட்டன. இதில் ஒரேதடவையில் ‘ஒரு போராளியின் உடமை மற்றும் அவரின் வேட்டெஃகம்(fire-arm) உட்பட மொத்தமாக நாற்பது போராளிகளை’ ஏற்றியெடுக்க முடியும்.

    மேலும் கலத்தினைச் சுற்றிவர பக்கவோரத்தில்(gunwale) இரும்புக் கம்பி வேலி போடப்பட்டுள்ளது. கடையாலில் இருந்து முதன்மைச் சுடுகலன் வரையிலான இரும்புக் கம்பி வேலியின் உயரம் 3.4 அடி ஆகும். அதன் பிறகு பாதியாகக் குறைந்து 1.7 அடியாகக் குறைந்து சிறிது தூரம் வரை இருக்கிறது. இக்கலங்களில் கடற்புலிகளின் கொடியும் தமிழீழத் தேசியக் கொடியும் பறக்கவிடப்பட்டிருக்கும். இக்கலங்களின் உள்ளேயே, இவற்றிற்குத் தேவையான அனைத்து கூடுதல் கணைகளும்(ammunition) இருப்பில் வைக்கப்பட்டிருக்கும்.

    இதன் அணியத்தின் ஆக முன்பகுதியின் மேற்புறத்தில் ஒரு கட்டை உள்ளது. அது படகினைக் கட்டி வைக்க உதவுகிறது. அத்துடன் கலவோட்டின் ஆக முன்பகுதியின்(அணியத்தின் கீழ்ப்புறம்) கீழ்புறத்தில் ஒரு கட்டை உள்ளது. அது படகுகாவியில் இருந்து இப்படகினை கீழே இழுத்து இறக்க உதவுகிறது. இக்கலங்களின் கடையாலின் இரு பக்கவோரங்களின் தொடக்கத்தில்(கடையாலில் இருந்து) இரு கட்டைகள்(இடப்பக்க-1; வலப்பக்கம்-1) உள்ளன.

    இக்கலங்களில் சிலவற்றின் மீகாமன் அறையின் வெளிப்புறத்தில் இருப்பக்கத்திலும் உள்ள சளரங்களினது இரு ஓரத்திலும் ஒவ்வொரு கம்பிகள் சீரான இடைவெளியில் நடப்பட்டிருக்கும்.(பட விளக்கத்திற்கு மதன் வகுப்பு விதம் இரண்டில் உள்ள வெண்ணிலா என்னும் படகினைக் காண்க)

    இனி ஒவ்வொரு வகுப்பாக விரிவாகக் காண்போம்:-

    • குறிப்பு: நான் இங்கே கொடுத்திருக்கும் பல்வேறு படைக்கலங்களின்(munition) பெயர்கள் யாவும் கடற்புலிகளின் பல முராஜ் வகைப் படகுகளின் படங்களில் நான் கண்டவற்றை அடிப்படையாக வைத்தே எழுதியுள்ளேன். பட ஆதாரம் தேவைப்படும் ஆய்வாளர்கள், என்னைத் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளவும்.

    <hr width=”148px”>

    • பிரசாந் வகுப்பு-

    இது கூர் அணியம் கொண்ட கலமாகும். இதன் கலக்கூடானது சீரானதாகவும் கடைக்காலில் இருந்து அணியம் நோக்கி வரவர உட்புறமாக நன்றாக வளைக்கப்பட்டும் இருந்தது. இவற்றில் ஒரு தெறுவேயம்[cannon (முதன்மை)] உட்பட மொத்தம் 7 சுடுகலங்கள் (உதயச்செல்வி தவிர) இருந்தன. இவற்றில் இரண்டு விதம் உண்டு .

    ‘பிரசாந்த் வகுப்புக் கலங்களின் கலக்கூடு(hull)’

    • நீளம் = 55′
    • அகலம் = 18′
    • கலவர் =15
    • வேகம் : 35–40 kts
    • தொலைத்தொடர்பு = EMCON, VHF
    • கதுவீ = வட்டு வடிவம்
    • வெளியிணைப்பு மின்னோடி = 4/5 x 250 HP
    • புவிநிலை காட்டி பொருத்தப்பட்டுள்ளது.
    • இவை EOD அமைப்புகளையும் கொண்டிருந்தன.
    • ஆய்தம் =
    • முதன்மை: 1xZPU-1/ 1x zpu-2/ 1xKPV/ 1xZU-23mm (ஒற்றைக்குழல்)/ ஓர்லிகோன் 20மி.மீ (ஒலிகன் – புலிகளின் மொழியில்)
    • பக்கவாடு: 2/3 x 12.7mm[DSHK(பெரும்பாலும் வகை-54)/NSVT], 1/2 x GL , 2/3 x 7.62 GPMG, M1919
    • கையடக்கம்(portable): 01 x RPG, AKS துமுக்கிகள்(rifle)
  • குழுவினர்: 14–16
    • முதன்மைச் சுடுகலத்தின் முதன்மைச் சூட்டாளர் – 1
    • முதன்மைச் சுடுகலத்தின் உதவியாளர்மார் – 3
    • பொறியியலாளர் & உதவியாளர் – 1+1
    • ஏனைய சுடுகல சூட்டாளர்மார் – 5/6
    • தொலைத்தொடர்பாளர் – 1
    • உந்துகணை(RPG) சூட்டாளர் – 1
    • கட்டளையாளர் – 1
    • மீகாமன் – 1
  • விதம் – 1
  • இது கல்லப்பட்டுள்ளது. அதாவது இதன் தளப்பகுதிக்கு மேலே ஒரு காப்பு அடுக்கு ஒன்று போடப்பட்டிருக்கிறது. அதன் தாழ்வானது, கிட்டத்தட்ட ஒரு சராசரி மனிதனின் முழங்கால் வரையிலான உயரம் உடைய அளவிற்கு தளத்தின் மேற்பரப்பிலிருந்து இருக்கிறது. இந்த காப்பு அடுக்கானது முழு அணியத்திற்கும் பக்கவோரத்திற்கும்(gunwale) போடப்பட்டுள்ளது. கடைக்காலில் அதன் பக்கவோரத்திற்கு மட்டும் போடப்பட்டுள்ளது.. அணியத்தின் முன்பகுதியில், பிறை வடிவ, ஓர் சராசரி மனிதனின்(ஈழத் தமிழன்) இடுப்பளவு உயர தடுப்பு ஒன்று கட்டப்பட்டுள்ளது. இது அந்த காப்பு அடுக்கைக் காட்டிலும் உயரமானது ஆகும். இது முதன்மைத் தெறுவேயத்தை நோக்கி சுடப்படும் எதிரியின் சன்னத்தில் இருந்து ஓரளவிற்கு காப்பளிக்கிறது.

    இதுவும் விதம்-1 போன்றே இருந்தாலும் அணியக் கட்டை மற்றும் சுடுகலத் தண்டு எண்ணிக்கை அடிப்படையில் வேறுபடுகிறது. இது போன்ற படகுகளிற்கு கட்டையானது நடுவில் இல்லாமல் அவற்றின் அணியத்தின் இருபுறத்திலும் இருக்கிறது. மேலும் இவற்றில் வலது பக்கவாட்டிற்கு 2 சுடுகலனும், இடது பக்கவாட்டிற்கு மூன்றும் சுடுகலனும் (எல்லாவற்றையும் போல் முதன்மைச் சுடுகலனாய் ஒன்றும்) என மொத்தம் 6 சுடுகலன்கள் உள்ளன.

    ‘தளப்பகுதிக்கு காப்பு அடுக்கு போடப்பட்டுள்ளதையும் அணியத்தில் தடுப்பு கட்டமைப்பு(structure) உள்ளதையும் நோக்குக’

    இது போன்ற ஒருசில படகுகளிற்கு கட்டையானது நடுவில் இல்லாமல் அவற்றின் அணியத்தின் இருபுறத்திலும் இருக்கிறது.

    விதம் – 2:

    இதுவும் விதம்-1 போன்றே இருந்தாலும் காப்பு அடுக்கு அடிப்படையில் மட்டும் வேறுபடுகிறது. இது கல்லப்படவில்லை. இதற்கு, காப்பு அடுக்கு முன்னர் போடப்பட்டு பேந்து கழற்றப்பட்டுள்ளது. அதற்கான அடையாளங்களும் இதன் தளப்பகுதில் தெரிகிறது. மாறாக தளத்தின் மேற்பரப்பில் இருந்து அரையடி உயரத்திற்கு பக்காவோரத்தில் (gunwale) உள்ள கம்பியின் அடியில் தகரம் போடப்பட்டுள்ளது. இதற்கு காப்பு அடுக்கு போடப்படாதலால் முன்பக்க தடுப்பும் இல்லை. இதன் நீளம் விதம் ஒன்றினது போலத்தான் உள்ளது. மேலும் அணியத்திற்கு வரும் பக்கவோர கம்பியின் உயரம் 0.8 அடியாக உள்ளது.

    ‘இவ்விதக் கலங்களின் முன்னிருந்து நோக்கும் காட்சி’

    இதுவும் விதம்-2 போன்றே இருந்தாலும் சுடுகலத் தண்டு எண்ணிக்கை அடிப்படையில் வேறுபடுகிறது. இதன் பெயர் ‘உதயச்செல்வி’ ஆகும். இது நீல வரி அணிந்த பெண் போராளிகளைக் கொண்டிருந்தது. இதில் 8 சுடுகலன்கள் பூட்டப்பட்டிருந்தன. அவற்றில் முன்னிற்கும்(ZPU-2) பின்னிற்கும் (ஓர்லிகோன் 20மி.மீ) தலா ஒரு முதன்மைத் தானியங்கி தெறுவேயம்(Autocannon) பூட்டப்பட்டிருந்தது. வலது பக்க நடுவில் மட்டும் ஒற்றைக் குழல் கைக்குண்டு செலுத்தி(40 mm) இருந்தது. இடது பக்க நடுவில் 7.62mm GPMG ஓர் பூட்டப்பட்டிருந்தது. ஏனைய நான்கு மூலைக்கும் இரண்டு 12.5மிமீ உம் இரண்டு PK GPMG உம் பூட்டப்பட்டிருந்தது. மேலும் இதன் கடைக்காலின் பக்கவோரத்திற்கு(gunwale) இரும்புக் கம்பிவேலி போடப்படவில்லை.

    இவை சில நேரத்தில் ஐந்து வெளியிணைப்புப் பொறிகளையும் கொண்டிருக்கும். இவை இனியில்லை என்ற வேகத் தாக்குதலிற்கு பூட்டப்பட்டு கொண்டு செல்லப்படும்.

    ‘மாதவியில் ஐந்து பொறிகள்(250Hp) பூட்டப்பட்டிருப்பதைக் காண்க’

    விதம் – 3:

    உள்ளிணைப்பு மின்னோடி(IBM) கொண்ட கலம்:-

    (கடையாலில் அந்த பெட்டி தெரியுதெல்லோ, அதுக்குள்ள தான் இதற்கான 3 பொறி வைக்கப்பட்டுள்ளது)

    • மதன் வகுப்பு-

    இவை கரண்டி வடிவ அணியத்தினையும் கத்தேட்றல் கூடுகளை(cathedral hull) உடையவை.

    • நீளம் =
    • விதம்-1: 70′
    • விதம்-2: தெரியவில்லை, ஆனால் விதம் ஒன்றினின்று குறைவு. ஒரு 55/60 அடி வரும்.
  • அகலம் = 18′ (விதம்- 1 & 2)
  • கலவர் = 12–15
  • வெளியிணைப்பு மின்னோடி = 4/5 x 250 HP
  • வேகம் :
    • விதம்-1: 40–43 kts(உச்ச வேகத்தில்)
    • விதம்-2: ஆனால் இதன் கலக்கூட்டினையும் நீளத்தினையும் வைத்துப் பார்க்கும் போது விதம் ஒன்றினை விட அதிவேகமாக ஓடக் கூடியவையாக இருக்கலாம் என்று கணிக்கிறேன்
  • தொலைத்தொடர்பு = EMCON, VHF
  • கதுவீ =
    • விதம்-1: நீள சதுர வடிவம்
    • விதம்-2: வட்டு வடிவம்
  • புவிநிலை காட்டி பொருத்தப்பட்டுள்ளது.
  • இவை EOD அமைப்புகளையும் கொண்டிருந்தன.
  • ஆய்தம் =
    • முதன்மை: 1x20mm ஓர்லிகோன்/ 1x zpu-2/ 25mm தெறுவேயம்/ KPV/ 25mm வகை-61
    • பக்கவாடு: 2/3×12.7mm(t-54, NSVT), 2/3×7.62 GPMG, .50 M2, 1/2 GL(விதம்-1), M1919F
    • கையடக்கம்(portable): 01 x RPG, துமுக்கிகள்(rifle)

    விதம்-1:-

    இவற்றின் கலக்கூட்டில் உள்ள கத்தேட்றல் கூட்டிற்கு தொடக்கப்புள்ளி உண்டு. இவை கல்லப்பட்டிருந்தன. இவற்றில் ஒரு தெறுவேயம்(முதன்மை) உட்பட மொத்தம் 7 சுடுகலங்களுக்கான தண்டுகள் இருந்தன. இருந்த கலங்களிலேயே இதுதான் மிகவும் நீளமானது ஆகும். அதற்கு அதிக உருமறைப்பு செய்யும் வகையில் வண்ணம் பூசப்பட்டுள்ளது. இதன் தளத்திற்கும் காப்பு அடுக்கு போடப்பட்டிருக்கிறது. இதன் மீகாமன் அறையும் ஏனைய கலங்களில் இருந்து வேறுபட்டிருக்கிறது. அதாவது, மீகாமன் அறையின் முன்பக்கமானது கொஞ்சம் சாய்ந்தாரமாக(slopy) இருக்கிறது.

    விதம்-2:

    இவற்றின் கலக்கூட்டில் உள்ள கத்தேட்றல் கூட்டிற்கு(cathedral hull) தொடக்கப்புள்ளி உண்டு. ஆனால் இவற்றின் தளத்திற்கு காப்பு போடப்படவேயில்லை. மாறாக பக்கவோரங்கள் 0.8 அடிக்கு தகரம் கொண்டு அடிக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு உருமறைப்பு செய்யும் வகையில் வரி வண்ணமும் லேபெர்மஸ்டெர் வண்ணும் பூசப்பட்டுள்ளது . இது, விதம் ஒன்றில் இருந்து நீளம் குறைவானது ஆகும். 4 ஆம் ஈழப்போரில் தான் இது கட்டப்பட்டிருக்கிறது.

    இவற்றில் ஒரு தெறுவேயம்(முதன்மை) உட்பட மொத்தம் 5 சுடுகலங்கள் இருந்தன.

    ‘இதன் பெயர்(மஞ்சள் நிறத்தில் இருப்பது) சிதைந்திருப்பதால் அறியமுடியவில்லை’

    விதம்-2:

    இவற்றின் கலக்கூட்டில் உள்ள கத்தேட்றல் கூட்டிற்கு தொடக்கப்புள்ளி உண்டு. இவை கல்லப்பட்டுள்ளன. இவற்றில் மொத்தம் 6 சுடுகலத் தண்டுகள் இருந்தன. அதற்கு அதிக உருமறைப்பு செய்யும் வகையில் வண்ணம் பூசப்பட்டுள்ளது. இதன் தளத்திற்கும் காப்பு அடுக்கு போடப்பட்டிருக்கிறது. இதன் மீகாமன் அறையும் ஏனைய கலங்களில் இருந்து வேறுபட்டிருக்கிறது. அதாவது, மீகாமன் அறையின் சாளரங்கள் வேறுபடுவதோடு அவை சாய்ந்தாரமாக(slopy) இல்லை. முன்பக்க சாளரங்கள் எல்லாக் கலங்களிற்கும் பிரிந்திருப்பது(இடத்திற்கு ஒன்று வலத்திற்கு ஒன்று) போன்று இல்லாமல் இரண்டும் இணைந்து செவ்வக வடிவில் உள்ளன.

    இதன் மீகாமன் அறை:

    விதம்-3:

    இது, விதம் இரண்டினை போன்றே தோற்றத்தில் இருந்தாலும் சுடுகலத் தண்டு மற்றும் மின்னோடி அடிப்படையில் வேறுபடுகின்றன. ஆனால் நீளம் அதே தான். இவற்றில் ஒரு தெறுவேயம்(முதன்மை) உட்பட மொத்தம் 7 சுடுகலங்கள் இருந்தன. இது போன்ற கலத்தினை புலிகளின் எந்தவொரு பாடல் நிகழ்படங்களிலும்(video) காண முடியவில்லை. இப்படகின் பெயர் வெண்ணிலா என்பதாகும். இதே போன்ற மற்றொரு கலத்தின் பெயர் பிரசாந் என்பதாகும்.

    • உள்ளிணைப்பு மின்னோடி = 3 x 250 HP

    ‘உள்ளிணைப்பு மின்னோடி’

    <hr width=”148px”>

    —வகுப்புப் பெயர் தெரியவில்லை

    இது கூர் அணியங் கொண்ட மிராஜ் வகையின் ஒத்த தோற்றம் கொண்ட மற்றொரு வகுப்புக்(class) கலம். பார்வைக்கு பிரசாந்த் வகுப்பின் சிற்றுரு போல தெரிகிறது . இதன் வகுப்புப் பெயர் எனக்குத் தெரியவில்லை. இது மிராஜ் வகையின் மூன்றாவது வகுப்பா என்பதும் தெரியவில்லை. இந்த வகைக் கலங்களின் ஒரு முதன்மைத் தெறுவேயம் உட்பட மொத்தம் 5 சுடுகலங்கள் உள்ளன.

    இதன் கலக்கூடானது பக்கவாட்டில் தட்டையாகவும் அடிப்பகுதியில் அகண்ட V வடிவிலும் உள்ளது. V வடிவானது முன்பகுதியில் இருந்து பின்பகுதி வரை நீள்கிறது.

    • நீளம் = 52.5′
    • அகலம் = 18′
    • வேகம் : அறியில்லை. ஆனால் உச்ச வேகம் ஒரு 45 Kts இருக்கலாம் என்று கணிக்கிறேன்
    • தொலைத்தொடர்பு = EMCON/ VHF
    • கதுவீ =
    • விதம் – 1:- வட்டு & செவ்வக வடிவம்
    • விதம் – 2:- வட்டு & செவ்வக வடிவம்
  • இவை EOD அமைப்புகளையும் கொண்டிருந்தன.
  • வெளியிணைப்புப் மின்னோடி – 4×250 HP
  • கலவர்: 8/9
  • விதம்- 1:-

    இதற்கு பிரசாந்த வகுப்பில் இருப்பது போன்ற தடுப்பு அமைப்பு அணியத்தில் உண்டு. மேலும் அதன் விதம் ஒன்று போல இதற்கும் காப்பு அடுக்கு போடப்பட்டுள்ளது. மேலும் இதன் மீகாமன் அறையானது ஏனைய கலங்களினின்றும் வேறுபடுகிறது, முன் சாளர அமைப்பில் மட்டும் அதாவது இதன் இரு சாளரங்களிற்கு இடையில் பெரும் இடைவெளி உண்டு.

    • இதில் 5 சுடுகலன்கள் உள்ளன.
    • ZU-23mm(ஒற்றைக் குழல்)- முதன்மைச் சுடுகலன்
    • வகை-54/DSHK (2) – அணியத்தின் வலது பக்கவாட்டில் & கடைக்காலின் வலது பக்கவாட்டில்
    • 7.62mm PK GPMG (2) – அணியத்தின் இடது பக்கவாட்டில் & கடைக்காலின் இடது பக்கவாட்டில்

    விதம்- 2:-

    இதன் பெயர் இந்துமதி ஆகும். இதை ஆண் கடற்கலவரே செலுத்தினர். இது பிரசாந்த் வகுப்பின் விதம் இரண்டின் சிற்றுரு போலவே இருக்கிறது. இதற்கு காப்பு அடுக்கு போடப்பட்டவேயில்லை; தகரம் அடிக்கப்பட்டுள்ளது. இது Jun 19, 2007 ஆம் ஆண்டு தாளையடிக்கு வெளியே நடந்த கடற்சமரில் படகின் அடியில் ஓட்டை விழுந்து மூழ்கியது.

    மூழ்கிய இப்படகினை மீட்டெடுத்த சிங்களக் கடற்படையினர், இதன் படகு வடிவமைப்பை தெரிந்துகொண்டு இதே போன்ற புதிய படகுகளை கட்டலாயினர்.(கட்டிய படகினைக் காண கருத்துப் பகுதிக்குச் செல்லவும்) அவற்றிற்கான பெயராக கடற்புலிகளால் இவ்வகைப் படகுகளிற்கு சூட்டப்பட்ட Wave Rider என்னும் பெயரையே, தங்களால் 2007 ஆண்டிற்குப் பிறப்பாடு விளைவிக்கப்பட்ட wave rider வகுப்புப் படகுகளிற்கும் சூட்டலாயினர்.

    • இதில் 5 சுடுகலன்கள் உள்ளன.
    • ZPU-2 (1)- முதன்மைச் சுடுகலன்
    • வகை-54/DSHK (2) – அணியத்தின் இடது பக்கவாட்டில் & கடைக்காலின் வலது பக்கவாட்டில்
    • 7.62mm PK GPMG (2) – அணியத்தின் வலது பக்கவாட்டில் & கடைக்காலின் இடது பக்கவாட்டில்

    ‘கூர் அணியம்’

    ‘இதனுள் இருந்து கைப்பற்றப்பட்ட கதுவீ திரை(RADAR) மற்றும் தொலைத் தொடர்புக் கருவிகள்’

    <hr width=”148px”>

    • மிராஜ் வகைக் கலனின் மீகாமன் அறைத் தோற்றம்:

    ‘முராஜ் வகைக் கலனின் மீகாமன் அறைத் தோற்றம்’

    ‘மீகாமன் அறையினுள் இரு பெண் மீகாமர் கலத்தினை செலுத்தும் காட்சி’

    <hr width=”148px”>

    • சுடுகலத் தண்டு:

    மிராஜ் வகுப்புக் கலங்களில் இருக்கும் இச்சுடுகலத் தண்டுகள் யாவும் வளி மூலம் இயங்குபவை ஆகும். இவற்றை எத்திசையிலும் எப்படியும் சுழற்ற இயலும். ஆனால் கீழ்நோக்கி குறிவைக்க முடியாது. இவை மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டிருந்தன.

    • முதன்மைத் தண்டு – முதன்மைச் சுடுகலன்கள்/ தெறுவேயங்களிற்கு(cannon) மட்டும்
    • நடுத்தரத் தண்டு – 12.7 மிமீ சுடுகலன்களிற்கும் கைக்குண்டு செலுத்திகளிற்கும்
    • மெல்லிய தண்டு – 7.62 மி.மீ சுடுகலன்களிற்கு மட்டும்

    ‘ குடைக்கப்படாத கூர் அணியக் கலனின் உட்புறத் தோற்றம்’

    ‘மிராஜ் வகைப் படகுகளில் பூட்டப்பட்டிருக்கும் ஒற்றைக் கைக்குண்டு செலுத்தி (GL)’

    இவற்றுள் முதன்மைச் சுடுகலனானது(ஒருசிலவற்றிற்கு – ZPU-23 ) அதன் தண்டில் ஆடாமல் அசையாமல் நிற்பதற்கு மிண்டு கொடுக்கப்பட்டிருக்கும். மிண்டானது அதன் தண்டோடு கீழ்கண்டவாறாக இணைக்கப்பட்டிருக்கும். அதன் மேல்தான் சுடுகலன் வைக்கப்பட்டிருக்கும்.

    இந்தச் சுடுகலங்களை இயக்கும் விற்பனர்கள் நிற்கும் இடத்திற்கு ஒரு குறுகிய உயரம் கொண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஏறி நின்றபடையே எதிரிமீது இவர்கள் சுடுவார்கள். அது ஒரு அரையடி/ முக்கால் அடி உயரம் உடையதாகும்.

    • பின்னுதைப்பற்ற சுடுகலன்(Recoilles gun):-

    இவ்வகைகலங்களில் (மிராஜ் அல்லது தல்ராஜ்) பின்னுதைப்பற்ற சுடுகலனும்(106 mm) பொருத்தப்பட்டிருக்கிறது.

    ‘பொருத்தப்பட்டிருப்பதை நோக்கவும். படம் அவ்வளவாக தெளிவாக இல்லையாதலால் இதன் வகைப்பெயர் என்னவென்று என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை’

    மற்றுமொன்று குறிப்பிடப்பட வேண்டியது யாதெனில், கடற்புலிகளின் முதன்மைச் சுடுகலன்களிற்கு மேலேயும் வட்டு வடிவ தொலைத் தொடர்புக் கருவி & சுடுகலனின் வலது / இடது பக்கத்தில் கதுவீ திரையும்(RADAR display) பொருத்தப்பட்டிருக்கும்.

    ‘முதன்மைச் சுடுகலனிற்கு மேலே தொலைத் தொடர்புக் கருவி பொருத்தப்பட்டுள்ளதை நோக்குக| இப்படகு கட்டப்பட்ட ஆண்டு : 1999 இன் பிற்பகுதி.’

    ‘முதன்மைச் சுடுகலனிற்கு மேலே கதுவீ திரை பொருத்தப்பட்டுள்ளதை நோக்குக’

    <hr width=”148px”>

    • நங்கூரம் –

    இவ்வகைப் படகுகளின் அணியத்தில் தான் இவற்றின் நங்கூரம் இருக்கும். (அணியத்தின் மேற்புறத்தில் உள்ள கட்டை). இதன் மூலம் இது கடல்களில் நங்கூரமிடப்பட்டிருக்கும்

    ‘மாதவி என்னும் கலப்பெயர் கொண்ட பிரசாந்த் வகுப்புக் கலம். இதன் நங்கூரத்திற்கு அருகில் தெரியும் அந்த சுவர் போன்ற கட்டமைப்புத்தான், சன்னத் தடுப்பு கட்டமைப்பாகும்’

    <hr width=”148px”>

    • தல்ராஜ் வகுப்புப் படகுகள் (Thalraj class boats)

    அடுத்து தல்ராஜ் வகுப்புக் கலங்கள் பற்றிக் காண்போம். இவை வேகத் தாக்குதல் படகு வகையைச் சேர்ந்தவை. நான் மூன்று கிழமைகளிற்கு முன்னர்தான் இப்பெயரையே கேள்விப் பட்டேன். ஆகையால் எனக்கு இவ்வகுப்புப் பற்றி எதுவுமே தெரியாது. இது பற்றி அறிந்தவர்கள் தகவல் கொடுத்து உதவவும்.

    <hr width=”148px”>

    இங்கு நான் இணைத்துள்ள படத்தில் உள்ள கடற்கலனானது சுண்டிக்குளம் பேப்பாரைப்பிட்டியில் சிறீலங்காத் தரைப்படைகளால் கைப்பற்றப்பட்டதாகும்.

    இது பார்ப்பதற்கு கூர் அணியம் கொண்ட மிராஜ் வகைக் கலன் போன்று உள்ளது. ஆனால் கலக்கூட்டு(hull) உயரமும் குறைவாக உள்ளதாகத் தென்படுகிறது. கலக்கூட்டில் அந்த V வடிவம் இல்லை. மேலும் கலக்கூட்டில் வெடிப்புத் தென்படுகிறது. அந்த வெடிப்பை நோக்கும் போது இது மரத்தால் செய்யப்பட்ட கலம் போன்று தெரிகிறது. கலத்தின் பக்கவோரத்தில்(gunwale) இரும்புக் கம்பி வேலியும் இல்லை. மீகாமன் அறையின் தோற்றமும் புலிகளின் சண்டைக் கலங்களினுடையதாக தோன்றவில்லை. மீகாமன் அறையும் பக்கவோரத்தோடு பொருந்து அளவிற்கு மிகவும் பெரிதாக உள்ளது. அதாவது கூகர் வகைப் படகுகளின் மீகாமன் அறை போன்று. மீகாமன் அறைக்கு மேலே வெளிப்புற வானலை வாங்கி(வெள்ளை நிற வட்டு வடிவம்) போன்று ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. உண்மையிலேயே வானலை வாங்கியா என்பது தெரியவில்லை.

    முடிவாக எனது துணிபு என்னவெனில், இது சிலவேளை சிங்கள வண்டுகளை ஏமாற்ற போலியாக செய்யப்பட்டதாகவும் இருக்கலாம் என்று எண்ணுகிறேன்.

    <hr width=”148px”>

    — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை!

    இதன் அணியம்(bow) கூர் அணியமாகும். இதற்கு காப்பு அடுக்கு போடப்படவில்லை. மாறாக, இதன் தளப்பகுதியானது உட்புறமாக குடையப்பட்டது போன்று தாழ்வாக இருந்தது. குடையப்பட்ட தாழ்வுயரம் எவ்வளவு என்று அறியமுடியவில்லை. இதன் கலக்கூடு கூட வேறு வடிவுடையதாக உள்ளது. அதாவது அதன் கடைக்கால்(stern) கலக்கூட்டில் ஒரு முக்கோண வடிவ புடைப்பம் ஒன்று உள்ளது. இதன் மீகாமன் அறை மிராஜ் கலங்களின் போன்று உள்ளது. மேலும் இக்கலத்தின் இரும்புக் கம்பி வேலியானது கடைக்காலிற்கு போடப்படவில்லை. இந்த இரும்புக் கம்பிவேலியின் உயரம் 3.4 அடி ஆகும்.

    இதன் முற்பகுதியில் இரண்டு DSHK(12.7 mm) பொருத்தப்பட்டுள்ளது. இது மட்டுமே இதில் தரிக்கப்பட்ட ஆய்தம் ஆகும். இதைத் கவிர வேறு ஏதேனும் சிறிய வகை வேட்டெஃகங்கள்(firearms) இருந்தனவா என்று என்னால் அறிய முடியவில்லை.

    • வெளியிணைப்பு மின்னோடி = 4 x 200 HP
    • வேகம் : 40–45 kts
    • கலவர் = 5–7
    • கதுவீ = வட்டு வடிவம்
    • தொலைத்தொடர்பு = VHF
    • ஆய்தம் = 2 x 12.7 mm வகை-54 (முதன்மை)

    1)

    2)

    • இதன் கலப்பெயர் k-71 என்று சிறீலங்கா அரசு கூறியுள்ளது.

    ‘கலத்தின் அணியம் | பின்னிருந்து முன்னோக்கிய பார்வை | கடற்கலத்தில் நின்று தாக்குதல் நடத்துபவர்கள் கடற்புலிகள். திரைப்படத்திற்காய் சிங்கள உடை அணிந்துள்ளர்கள் (உப்பில் உறைந்த உதிரங்கள் )’

    <hr width=”148px”>

    • கலப் பெயர்: வர்மன்
    • உயரம்: 6′ – 6.3′

    — புலிகள் சூட்டிய வகுப்புப் பெயர் தெரியவில்லை

    இது ஒரு வேறுபட்ட வகுப்பிலான படகாகும். இதன் வடிவம் மிராஜ் வகையை ஒத்திருப்பது போல தோன்றினாலும் அதனினின்று வேறுபட்டது ஆகும். இது கூர் அணியத்தைக்(pointed bow) கொண்டிருந்தது. இதன் கலக்கூடானது ஏனைய கலங்களின் கலக்கூட்டில் இருந்து முற்றிலுமாக வேறுபட்டதாக உள்ளது. (மேலே & கீழே உள்ள படத்தைக் கண்டு தெளிக).

    ‘கலக்கூடு(hull)’

    ‘அணியம்’

    ‘ அணியத்தின் தளம் தோண்டப்பட்டுள்ளதைக் காண்க’

    இதற்கும், நான் மேலே கூறிய k- 71 வகுப்புக் கலங்களிற்கு இருப்பது போல, அணியத் தளத்தின் உட்பகுதியானது இரண்டு அடிக்கு தோண்டப்பட்டுள்ளது. ஆனால் மீகாமன் அறையின் முன்பகுதித் தொடக்கத்தோடு இக்கட்டமைப்பு முற்றுப்பெறுகிறது. கடையால் அனைத்தும் தட்டையாக உள்ளது. அதற்கு தகரம் கூட அடிக்கப்படவில்லை. அணியத்தில் இருந்து கடைக்காலினை நோக்கும்போது கிட்டத்தட்ட ஒரு படி போல இருக்கிறது, இதன் தளம். அதாவது அணியப் பகுதியிலிருந்து ஏறி கடையாலிற்குச் செல்வது போல!

    ‘ ‘Battle field’ என்று எழுதப்பட்டுள்ளதிற்கு இடது புறத்திலே அந்த படி அமைப்பு முற்றுப்பெறுகிறதைக் காண்க’

    ‘பக்கவாட்டுத் தளம் தோண்டப்படாததைக் காண்க’

    இதன் பின்பகுதியில் ஐந்து வெளியிணைப்புப் பொறிகள்(OBM) பொருத்துவதற்கு ஏற்ப இட வசதி உண்டு. ஆனால் எத்தனை பொருத்தினார்களோ நானறியேன். மேலும் கலத்தினைச் சுற்றிவர முராஜ் வகைக்கு போடுவது போல பக்கவோரத்தில்(gunwale) இரும்புக் கம்பி வேலி போடப்பட்டுள்ளது. கடையாலில் இருந்து மீகாமன் அறை வரையிலான இரும்புக் கம்பிவேலியின் உயரம் 3.4 அடி ஆகும்.

    மேலும் எங்குமே சுடுகலன் பூட்டுவதற்கான தண்டுகளைக் காண முடியவில்லை. பின்வாங்கும்போது கழற்றிச் சென்றிருப்பார்களோ என்னவோ. ஆனால் கழற்றிச் சென்றிருந்தாலும் அதற்கான தடையம் இருந்திருக்கும், இதில் அப்படி எல்லாம் ஒன்றுமே இல்லை! அணியம் மொட்டையாக இருந்தது. கடையாலில் சரக்கறைகள் இருந்தன(எண்ணிக்கைக்கு – என்னால் சரியாக எண்ண முடியவில்லை!).

    ‘இதுதான் மீகாமன் அறை’

    ‘கடையாலும் வெளியிணைப்புப் பொறிக்கான(4/5) இட வசதியும் இங்கு காட்டப்பட்டுள்ளது | கடையாலில் சரக்கறைகள் தெரிகிறதைக் காணவும் ‘

    இந்தச் செய்தியாளரை வைத்து அதன் நீள அகலத்தை எடை போட்டுக்கொள்ளவும்!

    <hr width=”148px”>

    உசாத்துணை:

    படிமப்புரவு

    ஆக்கம் & வெளியீடு

    நன்னிச் சோழன்
    ‘2005 ஆண்டு முல்லைத் தீவுக் கடலில் ஓடும் கடற்புலிகளின் படகுகள். இப்படத்தில் 2 வகுப்பைச் சேர்ந்த 3 விதமான மொத்தம் 4 படகுகள் தெரிகின்றன. | படிமப்புரவு: Stock Photos, Stock Images & Vectors’

    எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை.. இவை தமிழினத்தின் வரலற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்….!
    எல்லா(hello)…

    வணக்கம் நண்பர்களே!

    இன்று நாம் பார்க்கப்போவது ஈழத்தமிழர்களால் உருவோட்டப்பட்ட மிராஜ்(Miraj) மற்றும் தல்ராஜ்(Thalraj) வகைக் கலங்கள் பற்றியே. நான், இவ்வாணத்தில், இவை பற்றி நானறிந்த செய்திகளை எழுதி வைக்கிறேன்.

    இவை 1993 இல் இருந்து 2009 ஐந்தாம் மாதம் வரை கடலில் ஓடின. பின்னாளில் சிங்களக் கடற்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டு ‘Wave Rider’ என்னும் அதே பெயரிலே மீண்டும் கடலில் ஓடுகின்றன. இவைதான் கடற்புலிகளின் முதன்மை கடற்சண்டைக் கலங்கள் ஆகும். இவை உலகத்தால் வேகச் சுடுகலப் படகு (FGB) என்னும் வகையினில் சேர்க்கப்பட்டன. தமிழீழத்தில் இவை வேகச் சண்டைப் படகு (Fast fighting boat) என்னும் வகையினில் சேர்க்கப்பட்டிருந்தன. கடற்புலிகளிடம் இவை 20–30 வரை இருந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    புலிகளால் பயன்படுத்தப்பட்ட இக்கடற்கலங்கள் எல்லாம் ஆடியிழைகளால் (fiber glass) ஆனவை.. ஆகையாலத்தான் இவை யூதரின் டோறாக்களைப் (Super Dvora Mk-III. 2008 ஆம் ஆண்டின் இறுதியில் இதன் பெரும வேகம் 48.3 நோட்ஸ் ஆகும்) போல அதிவேகமாக கடலில் ஓடின… ஏன் டோராக்களையே கடலில் துரத்தும் அளவிற்கு வேகம் பெற்றிருந்தன. கடற்புலிகளால் நான்காம் ஈழப்போரில் கட்டப்பட்ட ஒரு வகை வேகச் சண்டைப் படகுகளானவை 50 நோட்ஸ் வேகத்தில் ஓடியவை ஆகும். அதன் படம் எனக்கு கிடைக்கப் பெறவில்லை. அந்த சண்டைக் கலத்தின் வெள்ளோட்டத்தின் போது தான் கடற்புலிகளின் சேர்ப்பனான(Adm.) சிறப்புக் கட்டளையாளர் சூசை அவர்கள் நேர்ச்சியாகக் காயப்பட்டவர் என்பது இங்கு நினைவு கூரத்தக்கது.

    இக்கடற்கலங்களை கட்டுவதற்கு புலிகளிடம் 2 பிரிவுகள் இருந்தன. அவையாவன, மங்கை & டேவிட் படகு கட்டுமானம் என்பவையே.. கடற்புலிகள் தங்களின் இந்தக் கலங்களை வண்டி என்று அடைமொழியிட்டு அழைப்பார்கள். அதில், சமருக்குச் செல்லும் கலங்களிற்கு சண்டை வண்டி என்று அடைமொழியிட்டிருந்தனர். இவர்கள் தங்கள் கடற்கலங்களில் KOEN, FURNOCO, JRC, JMA, TOKIMEC, Garmin & Ray Marine ஆகிய கதுவீகளை (RADAR) பயன்படுத்தியிருந்தார்கள். (இவற்றில் எந்தக் கலத்தில் எதனைப் பயன்படுத்தினார்கள் என்பது தெரியாததால் அவற்றின் வடிவங்களை மட்டும் கீழே கொடுத்திருக்கிறேன்..)

    இக்கலங்கள் யாவும் தரித்து நிற்க துறைமுகங்கள் இல்லையாதலால் இவை படகுகாவிகளில்(dock) ஏற்றி அவர்கட்கு தேவையான இடங்களில் உருமறைக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். பின் கடற்சமர் வரும்போது உழுபொறியின்(tractor) உதவியுடன் கரைக்கு இழுத்துவரப்பட்டு அங்கு நிற்கு ஒருவகை இடிவாருவகத்தின்(Bulldozer) உதவியுடன் கடலினுள்ளே இறக்கப்படும். இறக்கும் போது கரையோர மணல் சாய்வாக தோண்டப்பட்டே இறக்கப்படும். இறக்கிய பின்னர் படகுகாவிகள் எல்லாம் அருகில் உருமறைக்கக் கூடிய இடங்களில் தரிபெறும். பின்னர், கடற்சமர் முடித்து கரைக்கு திரும்பிவரும் படகுகள் யாவும் இதில் ஏற்றப்பட்டு மீண்டும் பாதுகாப்பான இடங்களிற்கு கொண்டு செல்லப்படும்.

    ‘பலவகை படகுகாவிகள்’

    ‘மணலைத் தோண்ட வரும் அந்த இடிவாருவகம்(bulldozer)’

    ‘மணலைத் தோண்டும் இடிவாருவகம்’

    ‘தோண்டப்பட்ட சாய்வான இடத்தினூடாக கடலினுள் இறக்கபடும் முராஜ் வகைப் படகு | படகு, படகுகாவியின் மேலே வைக்கப்பட்டிருப்பதை கவனிக்கவும்’

    கடற்புலிகளின் கடற்கலங்கள் பல்வேறு வகையாக இருந்தாலும் அவர்கள் தங்களின் ஒவ்வொரு கடற்கலங்களுக்கும் தனித்தனிப் பெயர்களை(கலப்பெயர்) சூட்டியிருந்தனர். அவை அவர்களின் அமைப்பில் இருந்து வீரச்சாவினை தழுவிய போராளிகளின் பெயர்களை தாங்கி இருந்தன. இப்பெயர்கள் யாவும் அக்கலங்களின் கலக்கூட்டின் நடு அல்லது முன்பகுதியில் எழுதப்பட்டிருந்தன. சில கலங்களின் கலக்கூட்டில் அவற்றின் கலப் பெயர்கள் எதுவும் பொறிக்கப்படவில்லை. அவ்வாறு இருந்த பெயர்களை என்னால் இயன்றளவு தேடிச் சேகரித்துள்ளேன்.. அவையாவன,

    மிராஜ் வகைக் கலன்: இங்கு 32 கலங்களின் பெயர்களை கொடுத்துள்ளேன்.
    பிரசாந்த் வகுப்பு:-
    கலையரசி, பரந்தாமன், மாதவி, இசையரசி, தேன்மொழி, உதயச்செல்வி, மதன், மருதன், அதியமான்(ஒஸ்கார்), சேரன், கொலின்ஸ், செழியன், பாரதிதாசன், அகச்செழியன், ரோஜா, இளநீலா, கடலரசன், தீபன், சுகி, ராஜ்மோகன், அருணா, கேசவன், இளந்தாரகை
    புலிகளின் கட்டளைக் கலத்தின் பெயராக சிங்களவர் வெளியிட்டது – இளந்தாரகை
    மதன் வகுப்பு:
    பசீலன், எரிமலை, {_ _ _ கை(முதல் 3 எழுத்துக்களும் தெரியவில்லை)}, {ரா(சி/கி)_(எழுத்து தெரியவில்லை)னகன்}, வேங்கை, போர்க், பிரசாந்த், இன்னும் ஒன்றினது பெயர் சிதைந்திருப்பதால் அறியமுடியவில்லை.
    புலிகளின் ஆழ்கடல் சண்டைக் கலங்களின் கட்டளைப் படகின் பெயராக சிங்களவர் வெளியிட்டது – பிரசாந்த்
    இந்துமதி – இந்தக் கலம் போன்ற வகுப்பினை உடைய கலங்கள் எந்த வகை, எந்த வகுப்பு என்று அறியமுடியவில்லை.
    தல்ராஜ் வகைக் கலன்: எப்படிப்பட்டது என்றே தெரியவில்லை!
    ‘வர்மன்’ என்னும் கலப்பெயரிக் கொண்ட இக்கலத்தின் வகுப்பு, வகை பற்றி எந்தவொரு தகவலும் இல்லை.

    சரி, இனி ஒவ்வொரு வகையினைப் பற்றியும் காண்போம்.

    — மிராஜ் வகைப் படகு (Miraj Type boat)

    முதலில் மிராஜ் வகைப் படகுகள் பற்றி காண்போம். இவை Wave Rider என்றும் புலிகளால் அழைக்கப்பட்டன. இப்பெயரானது இக்கலங்களின் மீகாமன் அறையின் பக்கவாட்டில் பொறிக்கப்பட்டிருக்கும். இவற்றில் கடற்புலிகளிடம் 2 வகுப்புப் படகுகள் இருந்ததன. அவை ஆவன;

    பிரசாந்த் வகுப்பு – கூர் அணியப் படகு (Pointed bow boats)
    மதன் வகுப்பு – கரண்டி அணியப் படகு (spoon bow boats)
    இவ்வகைக் கலங்கள் பெரியளவிலான தாக்குதல் கலங்கள் ஆகும். இவை யூதர் படகேறி சீறும் கணையோடு கடலில் விரையும் சிறீலங்காக் கடற்படையோடு பொருத கடற்புலிகளுக்கு பெரிதும் உற்ற துணையாய் இருந்தன. இவை 1993இற்றான் முதன் முதலாக புலிகளால் கட்டுவிக்கப்பட்டன. இதில் ஒரேதடவையில் ‘ஒரு போராளியின் உடமை மற்றும் அவரின் வேட்டெஃகம்(fire-arm) உட்பட மொத்தமாக நாற்பது போராளிகளை’ ஏற்றியெடுக்க முடியும்.

    மேலும் கலத்தினைச் சுற்றிவர பக்கவோரத்தில்(gunwale) இரும்புக் கம்பி வேலி போடப்பட்டுள்ளது. கடையாலில் இருந்து முதன்மைச் சுடுகலன் வரையிலான இரும்புக் கம்பி வேலியின் உயரம் 3.4 அடி ஆகும். அதன் பிறகு பாதியாகக் குறைந்து 1.7 அடியாகக் குறைந்து சிறிது தூரம் வரை இருக்கிறது. இக்கலங்களில் கடற்புலிகளின் கொடியும் தமிழீழத் தேசியக் கொடியும் பறக்கவிடப்பட்டிருக்கும். இக்கலங்களின் உள்ளேயே, இவற்றிற்குத் தேவையான அனைத்து கூடுதல் கணைகளும்(ammunition) இருப்பில் வைக்கப்பட்டிருக்கும்.

    இதன் அணியத்தின் ஆக முன்பகுதியின் மேற்புறத்தில் ஒரு கட்டை உள்ளது. அது படகினைக் கட்டி வைக்க உதவுகிறது. அத்துடன் கலவோட்டின் ஆக முன்பகுதியின்(அணியத்தின் கீழ்ப்புறம்) கீழ்புறத்தில் ஒரு கட்டை உள்ளது. அது படகுகாவியில் இருந்து இப்படகினை கீழே இழுத்து இறக்க உதவுகிறது. இக்கலங்களின் கடையாலின் இரு பக்கவோரங்களின் தொடக்கத்தில்(கடையாலில் இருந்து) இரு கட்டைகள்(இடப்பக்க-1; வலப்பக்கம்-1) உள்ளன.

    இக்கலங்களில் சிலவற்றின் மீகாமன் அறையின் வெளிப்புறத்தில் இருப்பக்கத்திலும் உள்ள சளரங்களினது இரு ஓரத்திலும் ஒவ்வொரு கம்பிகள் சீரான இடைவெளியில் நடப்பட்டிருக்கும்.(பட விளக்கத்திற்கு மதன் வகுப்பு விதம் இரண்டில் உள்ள வெண்ணிலா என்னும் படகினைக் காண்க)

    இனி ஒவ்வொரு வகுப்பாக விரிவாகக் காண்போம்:-

    குறிப்பு: நான் இங்கே கொடுத்திருக்கும் பல்வேறு படைக்கலங்களின்(munition) பெயர்கள் யாவும் கடற்புலிகளின் பல முராஜ் வகைப் படகுகளின் படங்களில் நான் கண்டவற்றை அடிப்படையாக வைத்தே எழுதியுள்ளேன். பட ஆதாரம் தேவைப்படும் ஆய்வாளர்கள், என்னைத் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளவும்.
    பிரசாந் வகுப்பு-
    இது கூர் அணியம் கொண்ட கலமாகும். இதன் கலக்கூடானது சீரானதாகவும் கடைக்காலில் இருந்து அணியம் நோக்கி வரவர உட்புறமாக நன்றாக வளைக்கப்பட்டும் இருந்தது. இவற்றில் ஒரு தெறுவேயம்[cannon (முதன்மை)] உட்பட மொத்தம் 7 சுடுகலங்கள் (உதயச்செல்வி தவிர) இருந்தன. இவற்றில் இரண்டு விதம் உண்டு .

    ‘பிரசாந்த் வகுப்புக் கலங்களின் கலக்கூடு(hull)’

    நீளம் = 55′
    அகலம் = 18′
    கலவர் =15
    வேகம் : 35–40 kts
    தொலைத்தொடர்பு = EMCON, VHF
    கதுவீ = வட்டு வடிவம்
    வெளியிணைப்பு மின்னோடி = 4/5 x 250 HP
    புவிநிலை காட்டி பொருத்தப்பட்டுள்ளது.
    இவை EOD அமைப்புகளையும் கொண்டிருந்தன.
    ஆய்தம் =
    முதன்மை: 1xZPU-1/ 1x zpu-2/ 1xKPV/ 1xZU-23mm (ஒற்றைக்குழல்)/ ஓர்லிகோன் 20மி.மீ (ஒலிகன் – புலிகளின் மொழியில்)
    பக்கவாடு: 2/3 x 12.7mm[DSHK(பெரும்பாலும் வகை-54)/NSVT], 1/2 x GL , 2/3 x 7.62 GPMG, M1919
    கையடக்கம்(portable): 01 x RPG, AKS துமுக்கிகள்(rifle)
    குழுவினர்: 14–16
    முதன்மைச் சுடுகலத்தின் முதன்மைச் சூட்டாளர் – 1
    முதன்மைச் சுடுகலத்தின் உதவியாளர்மார் – 3
    பொறியியலாளர் & உதவியாளர் – 1+1
    ஏனைய சுடுகல சூட்டாளர்மார் – 5/6
    தொலைத்தொடர்பாளர் – 1
    உந்துகணை(RPG) சூட்டாளர் – 1
    கட்டளையாளர் – 1
    மீகாமன் – 1
    விதம் – 1
    இது கல்லப்பட்டுள்ளது. அதாவது இதன் தளப்பகுதிக்கு மேலே ஒரு காப்பு அடுக்கு ஒன்று போடப்பட்டிருக்கிறது. அதன் தாழ்வானது, கிட்டத்தட்ட ஒரு சராசரி மனிதனின் முழங்கால் வரையிலான உயரம் உடைய அளவிற்கு தளத்தின் மேற்பரப்பிலிருந்து இருக்கிறது. இந்த காப்பு அடுக்கானது முழு அணியத்திற்கும் பக்கவோரத்திற்கும்(gunwale) போடப்பட்டுள்ளது. கடைக்காலில் அதன் பக்கவோரத்திற்கு மட்டும் போடப்பட்டுள்ளது.. அணியத்தின் முன்பகுதியில், பிறை வடிவ, ஓர் சராசரி மனிதனின்(ஈழத் தமிழன்) இடுப்பளவு உயர தடுப்பு ஒன்று கட்டப்பட்டுள்ளது. இது அந்த காப்பு அடுக்கைக் காட்டிலும் உயரமானது ஆகும். இது முதன்மைத் தெறுவேயத்தை நோக்கி சுடப்படும் எதிரியின் சன்னத்தில் இருந்து ஓரளவிற்கு காப்பளிக்கிறது.

    இதுவும் விதம்-1 போன்றே இருந்தாலும் அணியக் கட்டை மற்றும் சுடுகலத் தண்டு எண்ணிக்கை அடிப்படையில் வேறுபடுகிறது. இது போன்ற படகுகளிற்கு கட்டையானது நடுவில் இல்லாமல் அவற்றின் அணியத்தின் இருபுறத்திலும் இருக்கிறது. மேலும் இவற்றில் வலது பக்கவாட்டிற்கு 2 சுடுகலனும், இடது பக்கவாட்டிற்கு மூன்றும் சுடுகலனும் (எல்லாவற்றையும் போல் முதன்மைச் சுடுகலனாய் ஒன்றும்) என மொத்தம் 6 சுடுகலன்கள் உள்ளன.

    ‘தளப்பகுதிக்கு காப்பு அடுக்கு போடப்பட்டுள்ளதையும் அணியத்தில் தடுப்பு கட்டமைப்பு(structure) உள்ளதையும் நோக்குக’

    இது போன்ற ஒருசில படகுகளிற்கு கட்டையானது நடுவில் இல்லாமல் அவற்றின் அணியத்தின் இருபுறத்திலும் இருக்கிறது.

    விதம் – 2:

    இதுவும் விதம்-1 போன்றே இருந்தாலும் காப்பு அடுக்கு அடிப்படையில் மட்டும் வேறுபடுகிறது. இது கல்லப்படவில்லை. இதற்கு, காப்பு அடுக்கு முன்னர் போடப்பட்டு பேந்து கழற்றப்பட்டுள்ளது. அதற்கான அடையாளங்களும் இதன் தளப்பகுதில் தெரிகிறது. மாறாக தளத்தின் மேற்பரப்பில் இருந்து அரையடி உயரத்திற்கு பக்காவோரத்தில் (gunwale) உள்ள கம்பியின் அடியில் தகரம் போடப்பட்டுள்ளது. இதற்கு காப்பு அடுக்கு போடப்படாதலால் முன்பக்க தடுப்பும் இல்லை. இதன் நீளம் விதம் ஒன்றினது போலத்தான் உள்ளது. மேலும் அணியத்திற்கு வரும் பக்கவோர கம்பியின் உயரம் 0.8 அடியாக உள்ளது.

    ‘இவ்விதக் கலங்களின் முன்னிருந்து நோக்கும் காட்சி’

    இதுவும் விதம்-2 போன்றே இருந்தாலும் சுடுகலத் தண்டு எண்ணிக்கை அடிப்படையில் வேறுபடுகிறது. இதன் பெயர் ‘உதயச்செல்வி’ ஆகும். இது நீல வரி அணிந்த பெண் போராளிகளைக் கொண்டிருந்தது. இதில் 8 சுடுகலன்கள் பூட்டப்பட்டிருந்தன. அவற்றில் முன்னிற்கும்(ZPU-2) பின்னிற்கும் (ஓர்லிகோன் 20மி.மீ) தலா ஒரு முதன்மைத் தானியங்கி தெறுவேயம்(Autocannon) பூட்டப்பட்டிருந்தது. வலது பக்க நடுவில் மட்டும் ஒற்றைக் குழல் கைக்குண்டு செலுத்தி(40 mm) இருந்தது. இடது பக்க நடுவில் 7.62mm GPMG ஓர் பூட்டப்பட்டிருந்தது. ஏனைய நான்கு மூலைக்கும் இரண்டு 12.5மிமீ உம் இரண்டு PK GPMG உம் பூட்டப்பட்டிருந்தது. மேலும் இதன் கடைக்காலின் பக்கவோரத்திற்கு(gunwale) இரும்புக் கம்பிவேலி போடப்படவில்லை.

    இவை சில நேரத்தில் ஐந்து வெளியிணைப்புப் பொறிகளையும் கொண்டிருக்கும். இவை இனியில்லை என்ற வேகத் தாக்குதலிற்கு பூட்டப்பட்டு கொண்டு செல்லப்படும்.

    ‘மாதவியில் ஐந்து பொறிகள்(250Hp) பூட்டப்பட்டிருப்பதைக் காண்க’

    விதம் – 3:

    உள்ளிணைப்பு மின்னோடி(IBM) கொண்ட கலம்:-

    (கடையாலில் அந்த பெட்டி தெரியுதெல்லோ, அதுக்குள்ள தான் இதற்கான 3 பொறி வைக்கப்பட்டுள்ளது)

    மதன் வகுப்பு-
    இவை கரண்டி வடிவ அணியத்தினையும் கத்தேட்றல் கூடுகளை(cathedral hull) உடையவை.

    நீளம் =
    விதம்-1: 70′
    விதம்-2: தெரியவில்லை, ஆனால் விதம் ஒன்றினின்று குறைவு. ஒரு 55/60 அடி வரும்.
    அகலம் = 18′ (விதம்- 1 & 2)
    கலவர் = 12–15
    வெளியிணைப்பு மின்னோடி = 4/5 x 250 HP
    வேகம் :
    விதம்-1: 40–43 kts(உச்ச வேகத்தில்)
    விதம்-2: ஆனால் இதன் கலக்கூட்டினையும் நீளத்தினையும் வைத்துப் பார்க்கும் போது விதம் ஒன்றினை விட அதிவேகமாக ஓடக் கூடியவையாக இருக்கலாம் என்று கணிக்கிறேன்
    தொலைத்தொடர்பு = EMCON, VHF
    கதுவீ =
    விதம்-1: நீள சதுர வடிவம்
    விதம்-2: வட்டு வடிவம்
    புவிநிலை காட்டி பொருத்தப்பட்டுள்ளது.
    இவை EOD அமைப்புகளையும் கொண்டிருந்தன.
    ஆய்தம் =
    முதன்மை: 1x20mm ஓர்லிகோன்/ 1x zpu-2/ 25mm தெறுவேயம்/ KPV/ 25mm வகை-61
    பக்கவாடு: 2/3×12.7mm(t-54, NSVT), 2/3×7.62 GPMG, .50 M2, 1/2 GL(விதம்-1), M1919F
    கையடக்கம்(portable): 01 x RPG, துமுக்கிகள்(rifle)
    விதம்-1:-

    இவற்றின் கலக்கூட்டில் உள்ள கத்தேட்றல் கூட்டிற்கு தொடக்கப்புள்ளி உண்டு. இவை கல்லப்பட்டிருந்தன. இவற்றில் ஒரு தெறுவேயம்(முதன்மை) உட்பட மொத்தம் 7 சுடுகலங்களுக்கான தண்டுகள் இருந்தன. இருந்த கலங்களிலேயே இதுதான் மிகவும் நீளமானது ஆகும். அதற்கு அதிக உருமறைப்பு செய்யும் வகையில் வண்ணம் பூசப்பட்டுள்ளது. இதன் தளத்திற்கும் காப்பு அடுக்கு போடப்பட்டிருக்கிறது. இதன் மீகாமன் அறையும் ஏனைய கலங்களில் இருந்து வேறுபட்டிருக்கிறது. அதாவது, மீகாமன் அறையின் முன்பக்கமானது கொஞ்சம் சாய்ந்தாரமாக(slopy) இருக்கிறது.

    விதம்-2:

    இவற்றின் கலக்கூட்டில் உள்ள கத்தேட்றல் கூட்டிற்கு(cathedral hull) தொடக்கப்புள்ளி உண்டு. ஆனால் இவற்றின் தளத்திற்கு காப்பு போடப்படவேயில்லை. மாறாக பக்கவோரங்கள் 0.8 அடிக்கு தகரம் கொண்டு அடிக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு உருமறைப்பு செய்யும் வகையில் வரி வண்ணமும் லேபெர்மஸ்டெர் வண்ணும் பூசப்பட்டுள்ளது . இது, விதம் ஒன்றில் இருந்து நீளம் குறைவானது ஆகும். 4 ஆம் ஈழப்போரில் தான் இது கட்டப்பட்டிருக்கிறது.

    இவற்றில் ஒரு தெறுவேயம்(முதன்மை) உட்பட மொத்தம் 5 சுடுகலங்கள் இருந்தன.

    ‘இதன் பெயர்(மஞ்சள் நிறத்தில் இருப்பது) சிதைந்திருப்பதால் அறியமுடியவில்லை’

    விதம்-2:

    இவற்றின் கலக்கூட்டில் உள்ள கத்தேட்றல் கூட்டிற்கு தொடக்கப்புள்ளி உண்டு. இவை கல்லப்பட்டுள்ளன. இவற்றில் மொத்தம் 6 சுடுகலத் தண்டுகள் இருந்தன. அதற்கு அதிக உருமறைப்பு செய்யும் வகையில் வண்ணம் பூசப்பட்டுள்ளது. இதன் தளத்திற்கும் காப்பு அடுக்கு போடப்பட்டிருக்கிறது. இதன் மீகாமன் அறையும் ஏனைய கலங்களில் இருந்து வேறுபட்டிருக்கிறது. அதாவது, மீகாமன் அறையின் சாளரங்கள் வேறுபடுவதோடு அவை சாய்ந்தாரமாக(slopy) இல்லை. முன்பக்க சாளரங்கள் எல்லாக் கலங்களிற்கும் பிரிந்திருப்பது(இடத்திற்கு ஒன்று வலத்திற்கு ஒன்று) போன்று இல்லாமல் இரண்டும் இணைந்து செவ்வக வடிவில் உள்ளன.

    இதன் மீகாமன் அறை:

    விதம்-3:

    இது, விதம் இரண்டினை போன்றே தோற்றத்தில் இருந்தாலும் சுடுகலத் தண்டு மற்றும் மின்னோடி அடிப்படையில் வேறுபடுகின்றன. ஆனால் நீளம் அதே தான். இவற்றில் ஒரு தெறுவேயம்(முதன்மை) உட்பட மொத்தம் 7 சுடுகலங்கள் இருந்தன. இது போன்ற கலத்தினை புலிகளின் எந்தவொரு பாடல் நிகழ்படங்களிலும்(video) காண முடியவில்லை. இப்படகின் பெயர் வெண்ணிலா என்பதாகும். இதே போன்ற மற்றொரு கலத்தின் பெயர் பிரசாந் என்பதாகும்.

    உள்ளிணைப்பு மின்னோடி = 3 x 250 HP

    ‘உள்ளிணைப்பு மின்னோடி’

    —வகுப்புப் பெயர் தெரியவில்லை

    இது கூர் அணியங் கொண்ட மிராஜ் வகையின் ஒத்த தோற்றம் கொண்ட மற்றொரு வகுப்புக்(class) கலம். பார்வைக்கு பிரசாந்த் வகுப்பின் சிற்றுரு போல தெரிகிறது . இதன் வகுப்புப் பெயர் எனக்குத் தெரியவில்லை. இது மிராஜ் வகையின் மூன்றாவது வகுப்பா என்பதும் தெரியவில்லை. இந்த வகைக் கலங்களின் ஒரு முதன்மைத் தெறுவேயம் உட்பட மொத்தம் 5 சுடுகலங்கள் உள்ளன.

    இதன் கலக்கூடானது பக்கவாட்டில் தட்டையாகவும் அடிப்பகுதியில் அகண்ட V வடிவிலும் உள்ளது. V வடிவானது முன்பகுதியில் இருந்து பின்பகுதி வரை நீள்கிறது.

    நீளம் = 52.5′
    அகலம் = 18′
    வேகம் : அறியில்லை. ஆனால் உச்ச வேகம் ஒரு 45 Kts இருக்கலாம் என்று கணிக்கிறேன்
    தொலைத்தொடர்பு = EMCON/ VHF
    கதுவீ =
    விதம் – 1:- வட்டு & செவ்வக வடிவம்
    விதம் – 2:- வட்டு & செவ்வக வடிவம்
    இவை EOD அமைப்புகளையும் கொண்டிருந்தன.
    வெளியிணைப்புப் மின்னோடி – 4×250 HP
    கலவர்: 8/9
    விதம்- 1:-

    இதற்கு பிரசாந்த வகுப்பில் இருப்பது போன்ற தடுப்பு அமைப்பு அணியத்தில் உண்டு. மேலும் அதன் விதம் ஒன்று போல இதற்கும் காப்பு அடுக்கு போடப்பட்டுள்ளது. மேலும் இதன் மீகாமன் அறையானது ஏனைய கலங்களினின்றும் வேறுபடுகிறது, முன் சாளர அமைப்பில் மட்டும் அதாவது இதன் இரு சாளரங்களிற்கு இடையில் பெரும் இடைவெளி உண்டு.

    இதில் 5 சுடுகலன்கள் உள்ளன.
    ZU-23mm(ஒற்றைக் குழல்)- முதன்மைச் சுடுகலன்
    வகை-54/DSHK (2) – அணியத்தின் வலது பக்கவாட்டில் & கடைக்காலின் வலது பக்கவாட்டில்
    7.62mm PK GPMG (2) – அணியத்தின் இடது பக்கவாட்டில் & கடைக்காலின் இடது பக்கவாட்டில்

    விதம்- 2:-

    இதன் பெயர் இந்துமதி ஆகும். இதை ஆண் கடற்கலவரே செலுத்தினர். இது பிரசாந்த் வகுப்பின் விதம் இரண்டின் சிற்றுரு போலவே இருக்கிறது. இதற்கு காப்பு அடுக்கு போடப்பட்டவேயில்லை; தகரம் அடிக்கப்பட்டுள்ளது. இது Jun 19, 2007 ஆம் ஆண்டு தாளையடிக்கு வெளியே நடந்த கடற்சமரில் படகின் அடியில் ஓட்டை விழுந்து மூழ்கியது.

    மூழ்கிய இப்படகினை மீட்டெடுத்த சிங்களக் கடற்படையினர், இதன் படகு வடிவமைப்பை தெரிந்துகொண்டு இதே போன்ற புதிய படகுகளை கட்டலாயினர்.(கட்டிய படகினைக் காண கருத்துப் பகுதிக்குச் செல்லவும்) அவற்றிற்கான பெயராக கடற்புலிகளால் இவ்வகைப் படகுகளிற்கு சூட்டப்பட்ட Wave Rider என்னும் பெயரையே, தங்களால் 2007 ஆண்டிற்குப் பிறப்பாடு விளைவிக்கப்பட்ட wave rider வகுப்புப் படகுகளிற்கும் சூட்டலாயினர்.

    இதில் 5 சுடுகலன்கள் உள்ளன.
    ZPU-2 (1)- முதன்மைச் சுடுகலன்
    வகை-54/DSHK (2) – அணியத்தின் இடது பக்கவாட்டில் & கடைக்காலின் வலது பக்கவாட்டில்
    7.62mm PK GPMG (2) – அணியத்தின் வலது பக்கவாட்டில் & கடைக்காலின் இடது பக்கவாட்டில்

    ‘கூர் அணியம்’

    ‘இதனுள் இருந்து கைப்பற்றப்பட்ட கதுவீ திரை(RADAR) மற்றும் தொலைத் தொடர்புக் கருவிகள்’

    மிராஜ் வகைக் கலனின் மீகாமன் அறைத் தோற்றம்:

    ‘முராஜ் வகைக் கலனின் மீகாமன் அறைத் தோற்றம்’

    ‘மீகாமன் அறையினுள் இரு பெண் மீகாமர் கலத்தினை செலுத்தும் காட்சி’

    சுடுகலத் தண்டு:
    மிராஜ் வகுப்புக் கலங்களில் இருக்கும் இச்சுடுகலத் தண்டுகள் யாவும் வளி மூலம் இயங்குபவை ஆகும். இவற்றை எத்திசையிலும் எப்படியும் சுழற்ற இயலும். ஆனால் கீழ்நோக்கி குறிவைக்க முடியாது. இவை மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டிருந்தன.

    முதன்மைத் தண்டு – முதன்மைச் சுடுகலன்கள்/ தெறுவேயங்களிற்கு(cannon) மட்டும்
    நடுத்தரத் தண்டு – 12.7 மிமீ சுடுகலன்களிற்கும் கைக்குண்டு செலுத்திகளிற்கும்
    மெல்லிய தண்டு – 7.62 மி.மீ சுடுகலன்களிற்கு மட்டும்

    ‘ குடைக்கப்படாத கூர் அணியக் கலனின் உட்புறத் தோற்றம்’

    ‘மிராஜ் வகைப் படகுகளில் பூட்டப்பட்டிருக்கும் ஒற்றைக் கைக்குண்டு செலுத்தி (GL)’

    இவற்றுள் முதன்மைச் சுடுகலனானது(ஒருசிலவற்றிற்கு – ZPU-23 ) அதன் தண்டில் ஆடாமல் அசையாமல் நிற்பதற்கு மிண்டு கொடுக்கப்பட்டிருக்கும். மிண்டானது அதன் தண்டோடு கீழ்கண்டவாறாக இணைக்கப்பட்டிருக்கும். அதன் மேல்தான் சுடுகலன் வைக்கப்பட்டிருக்கும்.

    இந்தச் சுடுகலங்களை இயக்கும் விற்பனர்கள் நிற்கும் இடத்திற்கு ஒரு குறுகிய உயரம் கொண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஏறி நின்றபடையே எதிரிமீது இவர்கள் சுடுவார்கள். அது ஒரு அரையடி/ முக்கால் அடி உயரம் உடையதாகும்.

    பின்னுதைப்பற்ற சுடுகலன்(Recoilles gun):-
    இவ்வகைகலங்களில் (மிராஜ் அல்லது தல்ராஜ்) பின்னுதைப்பற்ற சுடுகலனும்(106 mm) பொருத்தப்பட்டிருக்கிறது.

    ‘பொருத்தப்பட்டிருப்பதை நோக்கவும். படம் அவ்வளவாக தெளிவாக இல்லையாதலால் இதன் வகைப்பெயர் என்னவென்று என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை’

    மற்றுமொன்று குறிப்பிடப்பட வேண்டியது யாதெனில், கடற்புலிகளின் முதன்மைச் சுடுகலன்களிற்கு மேலேயும் வட்டு வடிவ தொலைத் தொடர்புக் கருவி & சுடுகலனின் வலது / இடது பக்கத்தில் கதுவீ திரையும்(RADAR display) பொருத்தப்பட்டிருக்கும்.

    ‘முதன்மைச் சுடுகலனிற்கு மேலே தொலைத் தொடர்புக் கருவி பொருத்தப்பட்டுள்ளதை நோக்குக| இப்படகு கட்டப்பட்ட ஆண்டு : 1999 இன் பிற்பகுதி.’

    ‘முதன்மைச் சுடுகலனிற்கு மேலே கதுவீ திரை பொருத்தப்பட்டுள்ளதை நோக்குக’

    நங்கூரம் –
    இவ்வகைப் படகுகளின் அணியத்தில் தான் இவற்றின் நங்கூரம் இருக்கும். (அணியத்தின் மேற்புறத்தில் உள்ள கட்டை). இதன் மூலம் இது கடல்களில் நங்கூரமிடப்பட்டிருக்கும்

    ‘மாதவி என்னும் கலப்பெயர் கொண்ட பிரசாந்த் வகுப்புக் கலம். இதன் நங்கூரத்திற்கு அருகில் தெரியும் அந்த சுவர் போன்ற கட்டமைப்புத்தான், சன்னத் தடுப்பு கட்டமைப்பாகும்’

    தல்ராஜ் வகுப்புப் படகுகள் (Thalraj class boats)
    அடுத்து தல்ராஜ் வகுப்புக் கலங்கள் பற்றிக் காண்போம். இவை வேகத் தாக்குதல் படகு வகையைச் சேர்ந்தவை. நான் மூன்று கிழமைகளிற்கு முன்னர்தான் இப்பெயரையே கேள்விப் பட்டேன். ஆகையால் எனக்கு இவ்வகுப்புப் பற்றி எதுவுமே தெரியாது. இது பற்றி அறிந்தவர்கள் தகவல் கொடுத்து உதவவும்.

    இங்கு நான் இணைத்துள்ள படத்தில் உள்ள கடற்கலனானது சுண்டிக்குளம் பேப்பாரைப்பிட்டியில் சிறீலங்காத் தரைப்படைகளால் கைப்பற்றப்பட்டதாகும்.

    இது பார்ப்பதற்கு கூர் அணியம் கொண்ட மிராஜ் வகைக் கலன் போன்று உள்ளது. ஆனால் கலக்கூட்டு(hull) உயரமும் குறைவாக உள்ளதாகத் தென்படுகிறது. கலக்கூட்டில் அந்த V வடிவம் இல்லை. மேலும் கலக்கூட்டில் வெடிப்புத் தென்படுகிறது. அந்த வெடிப்பை நோக்கும் போது இது மரத்தால் செய்யப்பட்ட கலம் போன்று தெரிகிறது. கலத்தின் பக்கவோரத்தில்(gunwale) இரும்புக் கம்பி வேலியும் இல்லை. மீகாமன் அறையின் தோற்றமும் புலிகளின் சண்டைக் கலங்களினுடையதாக தோன்றவில்லை. மீகாமன் அறையும் பக்கவோரத்தோடு பொருந்து அளவிற்கு மிகவும் பெரிதாக உள்ளது. அதாவது கூகர் வகைப் படகுகளின் மீகாமன் அறை போன்று. மீகாமன் அறைக்கு மேலே வெளிப்புற வானலை வாங்கி(வெள்ளை நிற வட்டு வடிவம்) போன்று ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. உண்மையிலேயே வானலை வாங்கியா என்பது தெரியவில்லை.

    முடிவாக எனது துணிபு என்னவெனில், இது சிலவேளை சிங்கள வண்டுகளை ஏமாற்ற போலியாக செய்யப்பட்டதாகவும் இருக்கலாம் என்று எண்ணுகிறேன்.

    — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை!

    இதன் அணியம்(bow) கூர் அணியமாகும். இதற்கு காப்பு அடுக்கு போடப்படவில்லை. மாறாக, இதன் தளப்பகுதியானது உட்புறமாக குடையப்பட்டது போன்று தாழ்வாக இருந்தது. குடையப்பட்ட தாழ்வுயரம் எவ்வளவு என்று அறியமுடியவில்லை. இதன் கலக்கூடு கூட வேறு வடிவுடையதாக உள்ளது. அதாவது அதன் கடைக்கால்(stern) கலக்கூட்டில் ஒரு முக்கோண வடிவ புடைப்பம் ஒன்று உள்ளது. இதன் மீகாமன் அறை மிராஜ் கலங்களின் போன்று உள்ளது. மேலும் இக்கலத்தின் இரும்புக் கம்பி வேலியானது கடைக்காலிற்கு போடப்படவில்லை. இந்த இரும்புக் கம்பிவேலியின் உயரம் 3.4 அடி ஆகும்.

    இதன் முற்பகுதியில் இரண்டு DSHK(12.7 mm) பொருத்தப்பட்டுள்ளது. இது மட்டுமே இதில் தரிக்கப்பட்ட ஆய்தம் ஆகும். இதைத் கவிர வேறு ஏதேனும் சிறிய வகை வேட்டெஃகங்கள்(firearms) இருந்தனவா என்று என்னால் அறிய முடியவில்லை.

    வெளியிணைப்பு மின்னோடி = 4 x 200 HP
    வேகம் : 40–45 kts
    கலவர் = 5–7
    கதுவீ = வட்டு வடிவம்
    தொலைத்தொடர்பு = VHF
    ஆய்தம் = 2 x 12.7 mm வகை-54 (முதன்மை)
    1)

    2)

    இதன் கலப்பெயர் k-71 என்று சிறீலங்கா அரசு கூறியுள்ளது.

    ‘கலத்தின் அணியம் | பின்னிருந்து முன்னோக்கிய பார்வை | கடற்கலத்தில் நின்று தாக்குதல் நடத்துபவர்கள் கடற்புலிகள். திரைப்படத்திற்காய் சிங்கள உடை அணிந்துள்ளர்கள் (உப்பில் உறைந்த உதிரங்கள் )’

    கலப் பெயர்: வர்மன்
    உயரம்: 6′ – 6.3′
    — புலிகள் சூட்டிய வகுப்புப் பெயர் தெரியவில்லை

    இது ஒரு வேறுபட்ட வகுப்பிலான படகாகும். இதன் வடிவம் மிராஜ் வகையை ஒத்திருப்பது போல தோன்றினாலும் அதனினின்று வேறுபட்டது ஆகும். இது கூர் அணியத்தைக்(pointed bow) கொண்டிருந்தது. இதன் கலக்கூடானது ஏனைய கலங்களின் கலக்கூட்டில் இருந்து முற்றிலுமாக வேறுபட்டதாக உள்ளது. (மேலே & கீழே உள்ள படத்தைக் கண்டு தெளிக).

    ‘கலக்கூடு(hull)’

    ‘அணியம்’

    ‘ அணியத்தின் தளம் தோண்டப்பட்டுள்ளதைக் காண்க’

    இதற்கும், நான் மேலே கூறிய k- 71 வகுப்புக் கலங்களிற்கு இருப்பது போல, அணியத் தளத்தின் உட்பகுதியானது இரண்டு அடிக்கு தோண்டப்பட்டுள்ளது. ஆனால் மீகாமன் அறையின் முன்பகுதித் தொடக்கத்தோடு இக்கட்டமைப்பு முற்றுப்பெறுகிறது. கடையால் அனைத்தும் தட்டையாக உள்ளது. அதற்கு தகரம் கூட அடிக்கப்படவில்லை. அணியத்தில் இருந்து கடைக்காலினை நோக்கும்போது கிட்டத்தட்ட ஒரு படி போல இருக்கிறது, இதன் தளம். அதாவது அணியப் பகுதியிலிருந்து ஏறி கடையாலிற்குச் செல்வது போல!

    ‘ ‘Battle field’ என்று எழுதப்பட்டுள்ளதிற்கு இடது புறத்திலே அந்த படி அமைப்பு முற்றுப்பெறுகிறதைக் காண்க’

    ‘பக்கவாட்டுத் தளம் தோண்டப்படாததைக் காண்க’

    இதன் பின்பகுதியில் ஐந்து வெளியிணைப்புப் பொறிகள்(OBM) பொருத்துவதற்கு ஏற்ப இட வசதி உண்டு. ஆனால் எத்தனை பொருத்தினார்களோ நானறியேன். மேலும் கலத்தினைச் சுற்றிவர முராஜ் வகைக்கு போடுவது போல பக்கவோரத்தில்(gunwale) இரும்புக் கம்பி வேலி போடப்பட்டுள்ளது. கடையாலில் இருந்து மீகாமன் அறை வரையிலான இரும்புக் கம்பிவேலியின் உயரம் 3.4 அடி ஆகும்.

    மேலும் எங்குமே சுடுகலன் பூட்டுவதற்கான தண்டுகளைக் காண முடியவில்லை. பின்வாங்கும்போது கழற்றிச் சென்றிருப்பார்களோ என்னவோ. ஆனால் கழற்றிச் சென்றிருந்தாலும் அதற்கான தடையம் இருந்திருக்கும், இதில் அப்படி எல்லாம் ஒன்றுமே இல்லை! அணியம் மொட்டையாக இருந்தது. கடையாலில் சரக்கறைகள் இருந்தன(எண்ணிக்கைக்கு – என்னால் சரியாக எண்ண முடியவில்லை!).

    ‘இதுதான் மீகாமன் அறை’

    ‘கடையாலும் வெளியிணைப்புப் பொறிக்கான(4/5) இட வசதியும் இங்கு காட்டப்பட்டுள்ளது | கடையாலில் சரக்கறைகள் தெரிகிறதைக் காணவும் ‘

    இந்தச் செய்தியாளரை வைத்து அதன் நீள அகலத்தை எடை போட்டுக்கொள்ளவும்!

    உசாத்துணை:

    youtube – virusinic
    http://boatswainslocker.com/
    https://www.maritimemanual.com/types-of-bow-designs/)ations
    Asymmetric Warfare at Sea – The Case of Sri Lanka, SLN Admiral Jayanath Colombage
    ஏனைய அனைத்தும் சொந்தமாக எழுதியவையே!
    படிமப்புரவு

    YouTube
    Photography Unit of Liberation Tigers
    Google
    EelamView
    Log In or Sign Up
    Royalty Free Stock Photos, Illustrations, Vector Art, and Video Clips
    நீல அச்சுப்படிகள் ரொகான் குணரத்னேவிடம் இருந்து எடுத்து நான் திருத்தியவை ஆகும்
    ஆக்கம் & வெளியீடு

    நன்னிச் சோழன்

    • This discussion was modified 1 year, 8 months ago by  Tamil Mahan.
Tamil Mahan replied 1 year, 8 months ago 1 Member · 0 Replies
  • 0 Replies

    Sorry, there were no replies found.

    Log in to reply.