விடுதலைப்புலிகள் தங்களது புலனாய்வு அமைப்பை 1986 ஆம் ஆண்டு

  • விடுதலைப்புலிகள் தங்களது புலனாய்வு அமைப்பை 1986 ஆம் ஆண்டு

    Posted by Tamil Mahan on February 10, 2022 at 1:21 pm

    விழிப்பே விடுதலையின் முதற்படி!! சர்வதேசப் பாதுகாப்பு மற்றும் இராணுவத் தந்திரங்களிற்கான DSI – Defense and International Security எனும் பிரெஞ்சு மாதாந்த இதழ், தங்களது தற்போதைய பதிப்பில், ‘போர்க்கலை’ எனும் தலைப்பின் கீழ் விடுதலைப் புலிகளின் புலனாய்வு மற்றும் வேவு பற்றிய ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளது. இதனை இரண்டு பத்தியளார்கள் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

    தொடர்ச்சியாக அவர்களது ஆய்வு…

    விடுதலைப்புலிகள் தங்களது புலனாய்வு அமைப்பை 1986 ஆம் ஆண்டு தேசியப் புலனாய்வுப் பிரிவாக (National intelligence Wing) ஆரம்பித்தனர். இதற்கு ஒரு வருடத்திற்கு முன்னர் இந்திய வெளியகப் புலனாய்வு அமைப்பான ரோவின் (Research and analysis wing) பயிற்சியாளர்களிடம் ஒரு தெரிவு செய்யப்பட்ட பிரிவானது புலனாய்வுப் பயிற்சி பெற்றது. அந்தச்சமயம், டெல்லி, சிறீலங்கா அரசின் மீதான கடும் அழுத்தத்தை பிரயோகிப்தற்காக, தமிழீழ விடுதலைப் போராளிகளிற்குத் தங்கள் பயிற்சிகளை வழங்கியிருந்தது.

    இந்தப் புதிய புலனாய்வுப் பிரிவிற்கு, தேசியத் தலைவரிற்கு மிகவும் நெருக்கமாகவும் நம்பிக்கையாகவும் இருந்த பொட்டு அம்மான் (சண்முகலிங்கம் சிவசங்கர்) பொறுப்பாளரானார்.

    வெறும் டெல்லி மட்டும் புலிகளின் புலனாய்வுப் பிரிவிற்கு பிதாமகர்களாக இருக்கவில்லை. 1980 களில் விடுதலைப்புலிகளின் தெரிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட போராளிகள், உலகத்தின் விரல் விட்டு எண்ணக்கூடிய அதியுச்சப் புலனாய்வுப் பிரிவுகளில் ஒன்றான மொசாட் அமைப்பிடம், இஸ்ரேலில் பயிற்சி பெற்றிருந்தனர்.

    அதன் பிறகான சில வருடங்களில், பாக்கிஸ்தானின் உளவு அமைப்பான nter-Services Intelligence (ISI) யின் பட்டறிவும் அனுபவமும் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவிற்குக் கிடைத்தது. புலனாய்வு உலகில் சிறந்த நிபுணத்துவம் பெற்ற அமைப்புகளின் பயிற்சியும், பட்டறிவும் இணைந்து அதி நிபுணத்துவம் வாய்ந்த பிரிவாக விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு தன்னைச் செதுக்கிக் கொண்டது.

    இந்தப் புலனாய்வு நுட்பத்தின் யுக்தி, 1989 ஆம் ஆண்டு வெளிப்பட்டது. அமைதிப்படைப் போர்வையில் இந்திய இராணுவம் வாங்கிக் கட்டிய அடியுடன், தளர்ந்திருந்த இந்திய இராணுவத்தினை வெளியேற்றுவதற்கான அதியுச்ச இராஜதந்திரம் மற்றும் புலனாய்வை விடுதலைப்புலிகள் மேற்கொண்டனர்.

    வளர்ச்சி நிலையில் இருந்த விடுதலைப்புலிகளின் புலனாய்வு, சிறீலங்கா அரசாங்கத்திற்கும், இந்திய அரசங்கத்திற்கும் இடையில் தங்கள் யுக்தியை வெளிப்படுத்தியது. எந்த சிறீலங்கா அரசாங்கம், இந்திய இராணுவத்தை தமிழீழ மண்ணிற்குள் கொண்டு வந்ததோ, அதே சிறீலங்கா அரசாங்கத்தைக் கொண்டே, இந்தியப் படைகளை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கான திட்டமிடலை உருவாக்கிய விதமும், அதனை நடாத்தி முடித்த விதமும், புலனாய்வின் உச்சமாகக் கருதப்படல் வேண்டும்.

    விடுதலைப் புலிகளின் புலனாய்வும், வேவும், எதிரிகளின் இதயப் பகுதிக்குள்ளேயே ஊடுருவியிருந்தன. இதற்கான தகவல்கள் வழங்குநர்களின் பெரும் வலையமைப்பை புலனாய்வுப் பிரிவினர் உருவாக்கினார்கள். சிறீலங்காவின் தலை நகரத்துக்குள்ளேயே விடுதலைப்புலிகள் பெரும் புலனாய்வு வலையை விரித்தனர். இதன் மூலம் தாக்க வேண்டிய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகளும் திட்டமிடப்பட்டன. தாக்குதல் இலக்குகளிற்கும் தாக்குதல் செயன்முறைகளும் முக்கியமான புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலேயே திட்டமிடப்பட்டன.

    புலனாய்விற்கான இந்த தகவல் முகவர்கள் வலையமைப்பானது நான்கு தொடக்கம் ஆறு முகவர்களைக் கொண்டு அமைக்கப்பட்டது. முதற்கட்டமாக வெளிக்கள முகவர்கள் உருவாக்கப்பட்டனர். இவர்களை மேற்பார்வை செய்வதற்கு பிரதான முகவர்கள் உருவாக்கப்பட்டனர். இந்த மேற்பார்வைகள் நேரடியாகச் செய்யப்படாமல் இடைநிலையாளர்கள் உருவாக்கப்பட்டு அவர்கள் மூலமே தகவற் பரிமாற்றம் நடாத்தப்பட்டது.

    ஆனால் இந்த வலையமைப்பு மிகவும் கட்டுக்கோப்பான புலனாய்வுத் தத்துவத்தின் படி இயக்கப்பட்டது. இந்த முகவர்கள் ஒரே வலையமைப்பில் இயங்கினாலும், ஒருவரிற்கு மற்றவரைத் தெரியாமலேயே இந்த வலையமைப்பு மிகவும் இரகசியக் காப்புடன் பேணப்பட்டது.

    விடுதலைப் புலிகளின் புலனாய்வு களத்தில் மட்டும் அல்லாது புலத்திலும் வழிநடாத்தப்பட்டு, களம், புலம் என வெவ்வேறு பிரிவுகளாக இயக்கப்பட்டு, கிடைக்கப் பெறும் தகவல்கள், புலனாய்வுத் துறையின் தலைமையகத்தில் ஒருங்கிணைக்கப்பட்டது.

    புலத்தில் உள்ள ஆதரவாளர்கள் மூலம் பெறப்படும் சாதாரணத் தகவல்கள் கூட மிக உன்னிப்பாக ஆராயப்பட்டு, அதில் உள்ள முக்கிய விடயங்கள் புலனாய்வுத் தகவல்களாக பெற்றுக்கொள்ளப்பட்டது. சாதாரண மக்களிடம் இருந்து, சாதாரணமாக அவர்களின் பேச்சுக்களில் இருந்தே பெறப்பட்டன. எதிரிகளின் பேச்சிலும், இடைமறிப்புகளிலும் கூட புலனாய்வுத் தகவல்கள் பெறப்பட்டன.

    எதிரிகளின் தளத்திலும், ஆதரவாளர்கள் தளத்திலும், மக்கள் மூலமும், புலனாய்வுத் தகவல்களை விடுதலைப்புலிகள் பெறுவதற்கு, இஸ்ரேலிய மொசாட்டின் வழிமுறையையே மிக நேர்த்தியாக விடுதலைப்புலிகள் மேற்கொண்டிருந்தனர். இந்தத் தகவற் புலனாய்வு, ஏப்ரூ மொழியில் சயனிம் (sayanim) என அழைக்கப்பட்டது.

    விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையானது 1993 இல் மிகவும் உச்சநிலையை அடைந்தது. புலனாய்வு வலையமைப்புக்களை உருவாக்குவது, முகவர்களை அடையளம் கண்டு அவர்களை உள்வாங்குவது போன்ற நடவடிக்கைகளால் விரிவடைந்தது. விடுதலை புலிகளின் புலனாய்வுத்துறையின் வளரச்சி, தன்னை ஐந்து பெரும் பிரிவகளாகப் பிரித்துக் கொண்டது.

    முதலாவதாக உள்ளகப் புலனாய்வும் பாதுகாப்பும் என ஒரு பிரிவு உருவாக்கப்பட்டது.

    இரண்டாவதாக எதிர்ப் புலனாய்வு நடவடிக்கைக்கான பிரிவு உருவாக்கப்பட்டது.

    முதலாவது பிரிவான உள்ளகப் புலனாய்வு வழங்கிய தகவல்கள், விடுதலைப்புலிகளின் புலனாய்வுத் துறை சேகரித்துவைத்துள்ள தகவற் தளத்துடன் இணைத்து, சரிபார்க்கப்பட்டு முழுமையான தகவலாக அது எதிர்ப்புலனாய்வுப் பிரிவினரால் முழுமைப்படுத்தப்படும்.

    மூன்றாவதாக புலனாய்வுத்துறையின் தொழில்நுட்பம், மற்றும் அதற்கான பயிற்சிகள் வழங்கும் முக்கிய கணினி மற்றும் தொழில்நுட்பப் பிரிவாக இந்தப் பிரிவு இயங்கும். நான்காவது பிரிவானது முக்கியமான நிர்வாக அலகுகளை நிர்வகிக்கும். ஐந்தாவது பிரிவு பற்றிய தகவல் வரும்……….

    Tamil Mahan replied 2 years, 11 months ago 1 Member · 0 Replies
  • 0 Replies

Sorry, there were no replies found.

Log in to reply.